ads
கடலை மாவு, பயத்தம் மாவு, கோதுமை மாவு இவற்றுடன் பால் அல்லது பாலாடை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவ, வெயிலில் கருத்த இடங்கள் மாறும்.


  • வெந்தயத்தை முதல் நாள் இரவே தயிரில் ஊற வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட, முடி உதிர்வு நிற்கும்.
  • தலை குளித்து முடித்ததும், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரால் தலையை அலசினால், கூந்தல் வறட்சி நீங்கும்.
  • சம அளவு வேப்பிலை, மருதாணி சேர்த்தரைத்த கலவையில் எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவிக் குளிக்க, பொடுகுத் தொல்லை நீங்கும்.
  • கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவைத் தயிருடன் சேர்த்து அடித்து, வெடிப்புகளின் மேல் தடவவும். அதன் மேல் ஒரு துணியைக் கட்டவும். ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரால் அலசி, எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்த தண்ணீரால் இன்னொரு முறை அலசவும்.
  • குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு, தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தடவிக் குளித்தால் சருமம் மென்மையாகும்.
  • கடலை மாவு, பயத்தம் மாவு, கோதுமை மாவு இவற்றுடன் பால் அல்லது பாலாடை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவ, வெயிலில் கருத்த இடங்கள் மாறும்.
  • அரிசி மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் உடன் கொஞ்சம் பால் அல்லது தயிர் கலந்து சருமத்தில் தடவிக் கழுவிட, சுருக்கங்கள் மறையும்.
  • தினம் நான்கைந்து துண்டு கேரட்டும், வெள்ளரிக்காயும் சாப்பிட்டு வந்தாலே சருமம் அழகாகும்.
  • வெள்ளரிக்காயை அரைத்துப் பருக்களின் மேல் தடவ, சீக்கிரமே பரு காணாமல் போகும்.
  • நன்றி - http://www.aambal.co.uk/magazine/issue-02/natural-beauty.html
ads
Share To:

Bloggersstand

Hello everyone

Post A Comment:

0 comments so far,add yours