ads


அக அழகு


ஒருவரின் அக அழகை முகமே காட்டுகின்றது. எனவே முகத்தை அழகுடன் வைத்தக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முகத்திலும் ஏதோ ஓர் அழகும், கவர்ச்சியும் இருக்கதான் செய்கின்றது. அவரவர்களுடைய சிகையலங்காரத்தை பொறுத்து அழகு கூடும், குறையும். மிகப் பெரிய காது உள்ளவாகள் காதை தலை முடியால் மறைத்து தலையலங்காரம் செய்ய அவர்கள் அழகுகூடும். இப்படிச் சின்னச் சின்ன மாற்றங்களால் உங்கள் அழகை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம்.
அலங்காரம் என்பது ஒரு தனிப்பெரும் கலை. நாம் நம்மை ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. சாதரணமாக வீட்டில் இருப்பது போல் வேலைக்குச் செல்ல முடியாது. அதுபோல் மணப்பெண் அலங்காரத்தோடும் போக முடியாது. எனவே நாம் எங்கு செல்கின்றோம் என்பதைப் பொருத்தே எமது ஒப்பனை அமைய வேண்டும்.முக அமைப்பிற்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு ஒப்பனை இருக்க வேண்டும். ஒப்பனை செய்திருக்கின்றோம் என்பதே தெரியாதபடி, மிக இயல்பாக முகம் இருப்பது போல் தெரியவேண்டும்.ஒப்பனைப் பொருட்களை வாங்கும் போது உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக, எண்ணெய்ப் பாங்கானதா, வறண்டதா என்பனவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கின்றது என்பதற்காக உங்கள் சருமத்திற்கு பொருத்தம் இல்லாதவற்றை வாங்காதீர்கள். அதனால் சருமம் பாதிக்பப்படும். முதலில் கையில் பூசி அலர்ஜியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அழகு சாதனப் பொருட்கள் நாட்செல்ல நாட்செல்ல பழுதடைவதால் அவற்றை வாங்கும் பொழுது சிறய அளவில் வாங்குவது நல்லது. முக அலங்காரத்தோடு இரவில் நித்திரைக்குச் செல்லக் கூடாது. படுக்கைக்குப் போகும் முன் முகத்தை நன்கு கழுவி ஒப்பனையை போக்கிக் கொள்ளவும். முகத்தில் பருக்கள் வருவதற்கு முகவலங்காரப் பொருட்களும் ஒரு காரணமாகும். முகத்தில் பருக்கள் வருவதை தடுப்பதற்கு முகத்தை கழுவித் துடைத்த பின் உறங்குவது உகந்ததாகும்.
Women's Page
அக அழகு என்பது முக அழகு மட்டும் சம்பந்தப்பட் விடயம் அல்ல. உங்கள் நடை, உடை நாகரீகத்துடன் , நளினம், அன்பு, பண்பு எல்லாம் சேர்ந்த ஓர் அரிய கலவையே அக அழகாகும். நன்கு வயது முதிர்ந்த பாட்டிகள் பொக்குவாயுடன் சிரிப்பதே மனதைக் கொள்ளை கொள்ளும் அழகாக இருக்கின்றதே! அது ஏன். அன்பிலும், பண்பிலும் முதிர்ந்ததினால் அவர்கள் அழகாய் இருக்கிறார்கள். ஆகவே அன்பும், பண்பும் எம்மைவிட்டு அகலாது.பார்த்துக்கொண்டால் அக அழகு தானாகவே தெரியும்.
ads
Share To:

Bloggersstand

Hello everyone

Post A Comment:

0 comments so far,add yours

Back To Top