தினமும் மஞ்சள் பூசலாமா??
மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு காரணம், அது மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதுதான். அதே மஞ்சளை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் வயது கூடுதலாக தெரியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
மஞ்சளில் கஸ்தூரி வகை மஞ்சள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதன் பயனை முழுமையாக பெற சுத்தமான கஸ்தூரி மஞ்சளை கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்னதாக, உடலில் தேங்-காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தேய்த்து, அதன்பின் இந்த கஸ்தூரி மஞ்சள் கலவையை பூசி குளிக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் மின்னத் தொடங்கிவிடும். இளமை அழகும் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
Post A Comment:
0 comments so far,add yours