மன
அழுத்தமும் கூந்தலும் - புதிய கண்டுபிடிப்பு!
யாருக்குத்தான் இல்லை மன உளைச்சல்? டென்ஷனும் மன அழுத்தமும் அளவை மிஞ்சும் போது மாரடைப்பு உள்ளிட்ட
இதய நோய்கள் வரலாம் என்று எத்தனையோ காலமாக சொல்லப் பட்டு வருகிறது. மன
அழுத்தத்துக்குக் காரணம் ‘கார்டிசால்’ என்கிற ஹார்மோன். டென்ஷன் அதிகமாகிற நேரங்களில் இதன் சுரப்பும்
அதிகரிக்குமாம். உமிழ்நீர், சிறுநீர் போன்றவற்றில் இதன் அளவைக்
கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் அளக்கும் போது மட்டுமே அது எவ்வளவு சுரக்கிறது
என்பது தெரியும்.
கூந்தலின் வேர்ப்பகுதியிலும் இந்த கார்டிசால் சுரப்பு இருப்பதைக்
கண்டுபிடித்திருக்கிறார்கள் சமீபத்தில். கூந்தலானது ஒரு மாதத்துக்கு 1 செ.மீ வளரும். 6 மாத வளர்ச்சியைக்
கணக்கிட்டு, 6 செ.மீ நீளமுள்ள
முடிக்கற்றையை எடுத்து சோதித்தால், கார்டிசாலின்
ஏற்ற, இறக்கங்களைக் கண்டுபிடிக்கவும், சம்பந்தப் பட்ட நபருக்கு மன அழுத்த அளவு எவ்வளவு இருக்கிறது
என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்பதே இதில் சிறப்பு.
டென்ஷன் ஹார்மோனின் சுரப்பு தாறுமாறாக இருக்கிற பட்சத்தில், அந்த நபருக்கு இதய நோய்கள் பற்றி அறிவுறுத்தி, வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்து கொள்ளச் சொல்லவும் இது
உதவுமாம்.
Post A Comment:
0 comments so far,add yours