ads

                               
                          வளரும் இளம்பெண்கள் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான ஆயின்மெண்ட்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில்  கலந்து இருக்கின்றன. 

இதை தவிர்க்க இயற்கை மருத்துவத்தில் மிக எளிமையான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. ஆசியா ஆப்பிரிக்கா  மற்றும் அமெரிக்காவில் உள்ள வனப் பிரதேசங்களில் ஒரு வகையான முள்ளங்கி கிடைக்கிறது. இதை குதிரை முள்ளங்கி, காட்டு முள்ளங்கி, மலை முள்ளங்கி என்றும் கூறுவார்கள். 

நமது காய்கறிகளில் முள்ளங்கி போன்ற வடிவத்திலேயே இவையும் இருப்பதால் இதை காட்டு முள்ளங்கி என்று அழைக்கிறார்கள். இதை அரைத்து சாறு பிழிந்து மென்மை அடையும் வறண்ட சருமம் மிருதுவாகும். இந்த கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பால் விட்டு கொதிக்க வைத்து பசை போல் செய்து முகத்திற்கு பூசி வரலாம். 

இதனால் முகம் வசீகரம் அடையும். எண்ணெய் வழியும் முகம் பலரின் தீராத குறைபாடாக உள்ளது. காலை வேளையில் குளித்து மேக்கப் போட்டுக்கொண்டு  வெளியில் செல்லும் சில பெண்களுக்கு அடுத்த அரை மணி நேரத்திற்க்குள் எண்ணெய் பிசுபிசுப்பு முகத்தில் தோன்றி அழகை குறைத்து விடும். 

நமது முகத்தில் உள்ள சில செல்களில்  அதிகப்படியான எண்ணெய் சுரப்பது தான் இதற்கு முக்கியமான காரணமாகும். இதை குணப்படுத்த காட்டு முள்ளங்கி மிகவும் உதவுகிறது. காட்டு முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் வேகவைத்து சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து பசை போல் செய்துகொள்ளலாம்.  

இதனை முகத்தில் தினசரி காலை மாலை வேளைகளில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். எண்ணெயின்  பிசுபிசுப்புத்தன்மை வராது. இதை முகத்திற்கு தொடர்ந்து பூசி ஒரு மணி நேரம் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருத்தொல்லைகள் கரும்புள்ளிகள் வடுக்கள் மற்றும் மருக்களும் மறைந்து விடும்.  மேலை நாடுகளில் மிகச்சிறந்த பேஸ் கிரிமாகப் பயன்படுத்துகிறார்கள். 

ads
Share To:
Next
Newer Post
Previous
This is the last post.

Bloggersstand

Hello everyone

Post A Comment:

0 comments so far,add yours