ஆண்களுக்கான அழகு குறிப்புகள் ..!
1. தினசரி குறைந்த அளவு ஏழு மணி நேரமாவது நன்றாக உறங்க வேண்டும் .
2.தினசரி காலை மாலை அல்லது இரவு இருவேளை குளிக்க வேண்டும்.
3.மூன்று மணி நேர இடைவெளிகளில் அல்லது வெயிலில் சென்று திரும்பும் பொழுது நன்றாக கை ,முகங்களை கழுவ வேண்டும் ..!
4.தண்ணீர் நிறைய அருந்துவது உடம்பை ஆரோக்கியமாகும் , அழகும் கூடும் .
5. இயற்கை பானங்கள் அருந்துவதி தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
6. பழச்சாறுகள் , இளநீர் ,பதநீர், கரும்புச் சாறு நல்லது ..!
7.உள்ளாடைகளை தினசரி மாற்றுங்கள் .. சுத்தமாக வைத்திருங்கள் ..!
8.நல்ல வாசனை திரவியங்கள் லைட்டாக பூசி கொள்ளுங்கள் ..!
9 . முகத்தை கடுகடுப்பாக இல்லாமல் புன்னகை தவழும் படி இருக்கவேண்டும்
10. பொய் பேசினால் இதயமும் முகமும் சுருங்கும் .. அழகாக இருக்க வேண்டும் என்றால் நேர்மையாக இருங்கள் ..! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ..!
11. ஆள் பாதி ஆடை பாதி .. அதனால் சுத்தமான நல்ல மிடுக்கான ஆடைகளியே அணியுங்கள் ..! உங்களின் ஆடை உங்கள் தோற்றத்தை மட்டுமல்ல உங்கள் செல்வம் ,கல்வி ,உங்கள் ரசனை அனைத்தையம் பிறருக்கு அறிமுகம் செய்யும் .. அதனால் ஆடை விசயத்தில் கவனம் ..!
12. அழகாக , சிம்பிளாக , தேர்ந்தொடுத்து பேசுங்கள் .. இந்த விதம் உங்களை பிறருக்கு இகவும் பிடிக்க வைக்கும் .. நீங்கள் மிகவும் அழகானவர்களாக அடுத்தவருக்கு தெரிவீர்கள் ..!
13. உங்கள் டிரைவராக இருந்தாலும் சரி நீங்களே டிரைவராக பிறரிடம் பனி புரிந்தாலும் சரியே .. அடுத்தவரின் பேச்சை காத்து கொடுத்து கேளுங்கள் .. அது மிகவும் மரியாதையான செயலாகும் .. அது பிறரிடம் உங்களை மதிப்பு மிக்கவராக காட்டும் ..! நீங்கள் மிகவும் மதிப்பு மிக்கவராக தெரிவீர்கள் .. பிறரின் பார்வையில் ..!
இவை அனைத்தும் என் சொந்த கருத்துக்கள் (புகைப்படத்தில் நான்தான் )
முகவை அப்துல்லாஹ் ..!
Post A Comment:
0 comments so far,add yours