ads

தோல் அழகு

சுகமான வாழ்வே மனிதனுக்கு நிரந்தரமான அழகைக் கொடுக்கும். சுகத்தோடு அழகாக இருப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னைத்தான் காதலிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தன்னைக் காதலிப்பவர்களால் தான் தன் உடலைப் பாதுகாக்க முடியும். மனித உடலின் பாதுகாப்பிற்கு தோல் மிகவும் அவசியம். இதனை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை .
உடலின் பாதுகாப்பிற்காக அதிகமாக உழைப்பது தோலே. சாதரண ஒரு மனிதனின் உடல் ஏறக்குறைய 2 சதுர மீட்டர் தோலால் மூடப்பட்டுள்ளது . தோல் எமதுடலை எந்நேரமும் கடும்பனி, கொட்டும்மழை, வீசும்காற்று, எரிக்கும் வெயில் போன்ற இயற்கை காரணிகளில் இருந்து காக்கின்றது. மேற்குலக நாடுகளில் நிறைந்திருக்கும் தூசிலும், பொலூசனிலும் இருந்து காக்கின்றது. தோல் மிகவும் அற்புதமாக தன்னைத் தானே எப்போதும் புதுப்பித்துக்கொள்ளவதோடு தூசிலும் காற்றிலும் இருக்கும் நோய்க்கிருமிகள் தாக்காது இடைவிடாது தடுக்கின்றது. நாம் நம் தோலில் ஏற்படுத்திக்கொள்ளும் வெட்டுக்காயம், தீக்காயம், கீறல் போன்றவற்றைக்கூட புதுத்தோலை உண்டாக்கி மாற்றுகின்றது. எனவே அதனைப் பேண வேண்டியது நமது பெறுப்பாகும்.
Skin Care issue-4
தோலில் வெளித்தோல் (Epidermis) உட்தோல் (Dermis) என இரண்டு அடுக்குகள் உண்டு. வெளித்தோலுக்கு நீர் மிகவும் அவசியம். தோலிலுள்ள நீரின் அளவு குறைந்தால் தோல் வறண்டு சுருக்கங்கள் ஏற்படுவதோடு வெடித்து செதில் போல் உரியவும் செய்யும். இதனைத் தடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். அதனால் தோல் பொலிவாவதோடு மலச்சிக்கலும் நீங்கி முகப்பரு உண்டாவதும் குறையும். தோலுக்கு மட்டுமல்லாமல் உடல் உறுப்புக்கள் யாவும் ஒழுங்காக செயல்படவும் நீர் அவசியம் வேண்டும்.
உட்தோலில் இருக்கும் ஒருவகை புரதப்பொருள்(Collagen ) தோலின் மீள்சக்திக்கு (Elastic ) உதவுகின்றது. உட்தோலிலேயே இரத்தக்குழாய்கள், நரம்புமுடிவுகள், மயிர்வேர்கள், வியர்வைச் சுரப்பிகள் எல்லாம் இருக்கின்றன. வெளித்தோலின் ஈரத்தன்மைக்காகப் பூசும் எந்தவொரு கிறீமும் லோசனும் உட்தோலைச் சென்றடைவதில்லை. நீங்கள் சத்துள்ள உணவுகளை உண்ணாது கொழுப்புள்ள உணவுகளை உண்டாலோ அல்லது உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அதற்கு தக்கபடி உட்தோல் பாதிக்கப்படும்.எனவே காய்கறிவகைகளையும் பழவகை களையும் நன்றாக சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ஸ் (Antioxidants ) உங்கள் தோலை மென்மையாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருப்பதோடு தோலில் வரக்கூடிய கான்சரையும் தடுக்கும்.
உங்கள் தோலின் அழகிற்கு
சுத்தமான தண்ணீரை
நிறையக் குடியுங்கள்.
நன்றாகக் குளியுங்கள்.
உடலுக்கு உகந்த உணவுகளை
உண்ணுங்கள்  ஒவ்வாத
உணவுகளை தள்ளுங்கள்.
நல்ல காற்றோட்டமுள்ள
சுத்தமான இடத்தில் நித்திரை
கொள்ளுங்கள்.
அதிக சர்க்கரை உண்பதால்
தோலில் சுருக்கம் ஏற்பட்டு
உங்கள் வயதைக்
கூட்டிக்காட்டும்.
தோல் மிகமென்மையானது.
உடலிலுள்ள அழுக்கைப்
போக்குகின்றோம் எனக்கூறிக்
கொண்டு மிகக்கரடுமுரடான
பொருளால் தோலைத்
தேய்க்காதீர்கள். அது
தோலைக்கீறி காயப்படுத்தி
எரிச்சலை உண்டாக்கும்.
கோடை பனி என்று இல்லாது
எப்பொழுதும் தோல் வறட்சி
யடையலாம். அதனைத்தடுக்க
தரமான (Moisturizing )
கிறீம், லோசன் உபயோகித்து  தோலின்
ஈரத்தன்மையை பேணுங்கள்
பலவகையான புதுப்புது
தயாரிப்புகளை ஒரேநேரத்தில்
உபயோகிப்பதை தவிர்க்கவும்.

அழகு ஸ்ரீ லங்கா தமிழ் - சிறிது மாற்றம் செய்து தந்துள்ளேன்.
பியுட்டிசியன் ஃபாத்திமா சேக்அப்துல்லாஹ் . 
நன்றி -
http://www.aambal.co.uk/magazine/issue-4/skin-care.html 
ads
Share To:

Bloggersstand

Hello everyone

Post A Comment:

0 comments so far,add yours

Back To Top